உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டி - நரிக்குடி ரோடு இருவழிச்சாலையாக மாற்றப்படுமா

காரியாபட்டி - நரிக்குடி ரோடு இருவழிச்சாலையாக மாற்றப்படுமா

காரியாபட்டி: போக்குவரத்து மிகுதியால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் காரியாபட்டி நரிக்குடி ரோடை இரு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டியிலிருந்து முடுக்கன்குளம், எஸ்.மறைக்குளம், பனைக்குடி வழியாக நரிக்குடிக்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. எஸ். மறைக்குளம், முடுக்கன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும், பல்வேறு தேவைகளுக்காக டூவீலர்கள், கார்கள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் காரியாபட்டிக்கு வருகின்றனர். எப்போதும் போக்குவரத்து மிகுதியாக இருந்து வருகிறது. ஏராளமான வளைவுகள், அதி வேகமாக வரும் வாகனங்கள், வேகத்தடைகள் என பல்வேறு காரணங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த ரோட்டில் பயணம் மேற்கொள்ள பலர் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். வளைவுகளில் சிக்னல்கள் சரி கிடையாது. குறிப்பாக தேனூர் அருகே கொண்டை ஊசி வளைவு உள்ளது. இதில் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு வளைவு இருப்பது குறித்து எச்சரிக்கை செய்ய மிளிரும் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். தொடர்ந்து நடப்பதால் அப்பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். அது போன்று பாப்பனம், கடமன்குளம், ஸ்ரீராம்பூர் என ஏராளமான வளைவுகளில் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க இருவழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி