உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இலங்கை அகதிகள் முகாமில் கட்டப்பட்ட குடியிருப்புகளின் தரம் பரிசோதிக்கப்படுமா

இலங்கை அகதிகள் முகாமில் கட்டப்பட்ட குடியிருப்புகளின் தரம் பரிசோதிக்கப்படுமா

விருதுநகர்: ஆனைக்குட்டம் உள்ளிட்ட சில இலங்கை அகதிகள் முகாம்களில் கட்டப்பட்ட வீடுகளில் சிமென்ட் பூச்சுகள் பெயர்வது, தளங்கள் சேத மடைவது வாடிக்கையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் கண்காணித்து தீர்வு காண வேண்டும். மாவட்டத்தில் குல்லுார்சந்தை முகாமில் 314 வீடுகள், மல்லாங்கிணரில் 40, வெம்பக்கோட்டை கண்டியாபுரம் 356 வீடுகள், ஆனைக்குட்டம் 117 வீடுகள், செவலுார் 70வீடுகள், அனுப்பங்குளம் 32 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் சில பகுதிகளில் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. தி.மு.க., அரசு கட்டிக் கொடுத்த இந்த வீடுகளில் ஆனைக்குட்டம், குல்லுார்சந்தை பகுதிகளில் சில வீடுகளின் பக்கவாட்டு சுவரில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. இத்தனைக்கும் இந்த வீடுகள் 2023ல் கட்டி கடந்தாண்டிற்கு பயன்பாட்டிற்கு வந்தது. இவை தற்போது பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகின்றன. இது குடியிருக்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதே போல் தரைத்தளம் உடைவது போன்ற சிக்கல்களும் காணப்படுகிறது. அடுத்த மாதம் மழைக்காலம் துவங்குகிறது. பல முகாம் குடியிருப்புகளில் வாறுகால் வசதி போதிய அளவில் இல்லை. இதனால் தேங்கும் மழைநீர் குடியிருப்பை சூழ்ந்து தேங்குவதால் கட்டடம் பாதிக்கப்படுகிறது. சேதமான கட்டடங்கள் மேலும் சேதமாக வாய்ப்புள்ளது. கட்டி முடித்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து குடியிருப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அவற்றின் பக்கவாட்டு சுவர்கள், தரைத்தளங்களின் நிலையை ஆய்வு செய்து அவற்றை சரி செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி