உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

சிவகாசி : பேராபட்டி சிவராம் நகரை சேர்ந்தவர் விவேக் மனைவி கோகிலா 30. திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடைக்கு போவதாக கூறிச் சென்ற கோகிலா மீண்டும் வீடு திரும்பவில்லை. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். *இளம் பெண் மாயம் சிவகாசி : திருத்தங்கல் திருப்பதி நகரை சேர்ந்தவர் கிருத்திகா 20. மூன்று மாதங்களுக்கு முன்பு கல்லுாரி படிப்பை முடித்த இவர் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர். --- ரூ. 2 .85 லட்சம் பட்டாசு மூலப் பொருட்கள் பறிமுதல் சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் திரவியராஜ் 42. இவர் மயிலாடுதுறையில் உள்ள தன்னுடைய பட்டாசு கடை அருகே தகர செட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதற்காக மூலப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ. 2 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான அலுமினிய பவுடர் 15 கிலோ, மணி மருந்து 60 கிலோ, உட்பட மூலப் பொருட்கள், பலதரப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். *அம்மன் கோவில் பட்டி தென்பாகம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வணிக வளாகத்தில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து ரூ. 40 ஆயிரம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை