உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீரசோழனில் ஆபரேட்டர் இல்லாததால் 20 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை

வீரசோழனில் ஆபரேட்டர் இல்லாததால் 20 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை

நரிக்குடி: வீரசோழனில் தண்ணீர் திறந்து விட ஆபரேட்டர் இல்லாததால் குடிநீர் சப்ளை செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் வீதியில் நின்று போராட்டம் நடத்தினர்.நரிக்குடி வீரசோழனில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடிநீர் சப்ளை செய்ய, உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்தும், தாமிரபரணி, வைகை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 4 பகுதிகளாக பிரித்து தண்ணீர் திறந்து விட ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டனர். ஊராட்சி நிர்வாகம் செயல்பட்ட போதே சரிவர சம்பளம் வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. சம்பளம் கிடைக்காததால் விரத்தியடைந்த ஆபரேட்டர்கள் இந்த வேலையை உதறிவிட்டு, மாற்று வேலைக்கு சென்றனர். புதிய ஆபரேட்டர்கள் கிடைக்காததால் குடிநீர் சப்ளை செய்வதில் பிரச்னை இருந்து வருகிறது.குறிப்பாக வீரசோழன் வடக்கு தெருவில் தண்ணீர் திறந்து விட ஆபரேட்டர் இல்லாததால், 20 நாட்களாக சப்ளை செய்ய வில்லை. அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். அதிக செலவு ஏற்படுவதுடன் போதுமானதாக இல்லை என்பதால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று முன்தினம் காலி குடங்களுடன் வீதியில் நின்று போராட்டம் நடத்தினர். போலீசார், ஒன்றிய அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஆபரேட்டர் நியமிக்கவும், சீரான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.வாசுகி, பி.டி.ஓ.. நரிக்குடி.வீரசோழனில் பணியாற்றிய ஆபரேட்டர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்பட்டது. ஒருவர் பணி நிறைவு பெற்று சென்றார். அதனால் பற்றாக்குறை உள்ளது. புதிய ஆபரேட்டர் நியமிக்க விளம்பரபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் நியமிக்கப்பட்டு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ