தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகரில் உடலுழைப்பு, கட்டுமான தொழிலாளர் நலவாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நலவாரியங்களை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் முருகன் தலைமை வகித்தார். துணை செயலாளர் செம்புலிங்கம், பொருளாளர் மாரிக்கனி முன்னிலை வகித்தனர். செயலாளர் சித்த நாதன் நன்றிக்கூறினார்.