மேலும் செய்திகள்
கல்லுாரி பட்டமளிப்பு விழா
24-Mar-2026
சிவகாசி:சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் பசுமையான நாளைய தினத்திற்கான நீடித்த நீர் சுத்திகரிப்பு என்ற தலைப்பில் உலக தண்ணீர் விழாவினை கொண்டாடும் வகையில் பயிலரங்கம் நடந்தது. கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா புரவலர்களாக வழி நடத்தினர். வேதியியல் துறை உதவி பேராசிரியர் பொற்கொடி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். காரியாபட்டி சேது தொழில்நுட்ப கழகம் வேதியல் துறை இணை பேராசிரியர் ஜெயலட்சுமி, முதுகலை வரலாற்று ஆய்வுத் துறை தலைவர் ரம்யா துவக்கி வைத்தனர். செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி பேராசிரியர் தங்க பிரியா நன்றி கூறினார்.
24-Mar-2026