உள்ளூர் செய்திகள்

உலக அணில்கள் தினம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் சர்வதேச அணில்கள் நாளை முன்னிட்டு, விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி செண்பகத் தோப்பு வன உயிரின மையத்தில் நடந்தது.ஆண்டுதோறும் ஜன. 21, சர்வதேச அணில்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சாம்பல் நிற அணில்கள் அதிகளவில் காணப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பிலும் கொண்டாடப்பட்டது.இதில் விருதுநகர் வடமலைகுறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று, அணில்கள் குறித்த ஆராய்ச்சியாளர்கள் ஹேமா, அபர்ணா, படியழகன், சதீஷ்குமார், பிரேஜ்வால் ஆகியோருடன் கலந்துரையாடினர்.இதில் அணில்கள், வன உயிரினங்கள் குறித்தும், அது குறித்த ஆய்வுகள் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் மற்றும் வனத்துறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ