நகை திருட்டு வாலிபர் கைது
சத்திரப்பட்டி, : சத்திரப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ரேவதி 33, வீட்டை பூட்டி சாவியை மின் பெட்டி பின்புறம் வைத்து வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 21 கிராம் நகை திருடு போயிருந்தது. கீழ ராஜகுலராமன் போலீசார் சந்தேகத்தின் பேரில் அருகாமை வீட்டை சேர்ந்த ராமசுப்பிரமணியனிடம் 24, விசாரணை செய்தனர். இதில் பூட்டி வெளியே செல்வதை நோட்டமிட்டு வீட்டை திறந்து நகை திருடியது தெரிந்தது. நகைகளை பறிமுதல் செய்து ராமசுப்ரமணியனை போலீசார் கைது செய்துள்ளனர்.