மேலும் செய்திகள்
வாலிபர் தற்கொலை
29-Sep-2024
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பூக்கடை பஜார் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 31, இவர் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மதியத்திலிருந்து இவர் வீட்டிற்கு வரவில்லை. அலைபேசியும் ஆப் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் காந்தி நகர் செம்பட்டி ரோடு அருகில் ஒரு மரத்தடியில் இளைஞர் ஒருவர் அரைகுறையாக எரிந்து பிணமாக கிடப்பதாக டவுன் போலீசார் விசாரணை செய்ததில் எரிந்து கிடந்தவர் சதீஷ்குமார் என்பதும், டீசலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் இவர் ஏற்கனவே தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரிய வந்தது. காதல் தோல்வியா கடன் பிரச்சனையா என்ற ரீதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.- - -
29-Sep-2024