வீட்டில் தீ விபத்து வாலிபர் காயம்
சிவகாசி : சிவகாசி அம்மன் கோவில்பட்டி தெருவை சேர்ந்தவர் கவுதம் 29. இவரது வீட்டில் மாடி அறையில் பழைய பட்டாசுகள், பழைய பொருட்கள் இருந்தது. அதில் திடீரென தீப்பிடித்ததில் கவுதம் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.