உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‘நடப்பாண்டில் 4,500 மாணவருக்கு ரூ.89 கோடி கல்வி கடன் வழங்கல்’

‘நடப்பாண்டில் 4,500 மாணவருக்கு ரூ.89 கோடி கல்வி கடன் வழங்கல்’

சேலம்: சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், காகாபாளையம் நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் முகாம் இன்று (நவ.,5) நடந்தது. கலெக்டர் இளம்பகவத் தொடங்கி வைத்து பேசியதாவது: ஏழை, நடுத்தர மாணவர்கள், பொருளாதார ரீதியில் உயர்கல்வி வாய்ப்பை இழக்கக்கூடாது என்பதற்காக, எந்த ஈட்டுறுதி இல்லாமல் அதிகபட்சம், 7.5 லட்சம் ரூபாய் கல்வி கடன் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் அதிகளவில் கல்வி கடன் வழங்க கல்லுாரிகளில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. கடந்த அக்., 27ல் அம்மாபேட்டை ஏ.வி.எஸ்., பொறியியல் கல்லுாரியில் நடந்த முதல் கட்ட முகாமில், 1.07 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. 2ம் கட்டமாக தற்போது நடக்கும் முகாமில், 30 மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 95.67 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை, 4,500 மாணவர்களுக்கு, 89 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள், அவர்கள் படிக்கும் கல்லுாரிகளிலேயே கடன் பெற வசதிகள் செய்யப்பட்டு, விண்ணப்பங்களை பதிவேற்ற, தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் மணி, முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் கவுரிசங்கர் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை