உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரமக்குடி கலவரம் : கடை அடைப்பால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு

பரமக்குடி கலவரம் : கடை அடைப்பால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு

ராமநாதபுரம் :பரமக்குடி கலவரம் ராமநாதபுரம் மாவட்டத்தையே ஸ்தம்பிக்க செய்தது. கடை அடைப்பால் 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மக்கள் இயல்பு வாழ்க்கையும் பாதித்து சிரமத்திற்குள்ளாகினர்.பரமக்குடி கலவரத்தால் 144 ஊரடங்கு தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி உட்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. நேற்று ஒரு நாளில் மட்டும் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும் திருமணம் மற்றும் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் நேற்று மாலைதான் திரும்பினர். இதனால் சென்னை சென்ற ரயில்கள், பஸ்களில் அதிகமான கூட்டம் இருந்தது. பரமக்குடியில் நேற்று, ஐ.ஜி.,க்கள் ராஜேஸ் தாஸ்(தென்மண்டலம்), மாகாளி(மத்திய மண்டலம்), திருச்சி டி.ஐ.ஜி.,அமல்ராஜ், எஸ்.பி.,க்கள் அருண்(கன்னியாகுமரி), சண்முகவேல்(சென்னை), அனில்குமார்கிரி(தஞ்சாவூர்), கண்ணப்பன்(அரியலூர்), சின்னசாமி (பட்டாலியன்) ஆகியோர் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான வீரம்பலை சேர்ந்த பன்னீர்செல்வம், 50, மஞ்சூர் ஜெயபால், 20, ஆகியோரது உடல்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தபின் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உடலை அவர்களது சொந்த ஊரில் அடக்கம் செய்ய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். கலவரத்தில் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 25 பஸ்கள் நொறுக்கப்பட்டன. இரண்டு பஸ் எரிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை