உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சக்சேனாவை போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்கும் மனு மீது இன்று விசாரணை

சக்சேனாவை போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்கும் மனு மீது இன்று விசாரணை

சென்னை:'மாப்பிள்ளை' பட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, 'சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் மனுவை, சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்று போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹித்தேஷ் ஜபக். இவர், 'மாப்பிள்ளை' என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தின் வர்த்தகம் தொடர்பான விவகாரத்தில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து சக்சேனா உள்ளிட்ட சிலர் மிரட்டியதாக கடந்த 11ம் தேதி, கோடம்பாக்கம் போலீசில் ஜபக் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் சக்சேனா கைது செய்யப்பட்டார்.இவ்வழக்கு தொடர்பாக சக்சேனாவிடம் புலன் விசாரணை நடத்த வேண்டும் என்பதால், அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என சைதாப்பேட்டை 17வது கோர்ட்டில், அரசு வக்கீல்கள் கோபிநாத், மேனுவல் அரசு ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்து வாதாடினர்.'போலீஸ் காவலில் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது' என, சக்சேனாவின் வக்கீல் பாட்சா தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், போலீஸ் காவல் மனு விசாரணையையும், சக்சேனாவின் ஜாமின் மனு விசாரணையையும் இன்று தள்ளி வைத்து, மாஜிஸ்திரேட் பிரியா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை