உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கே.என்.ராமஜெயத்தை திருச்சி சிறைக்கு மாற்ற மனைவி மனு: ஐகோர்ட் தள்ளிவைப்பு

கே.என்.ராமஜெயத்தை திருச்சி சிறைக்கு மாற்ற மனைவி மனு: ஐகோர்ட் தள்ளிவைப்பு

மதுரை: நில அபகரிப்பு வழக்கில் கைதான தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தை பாளை சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்ற கோரிய மனு மீதான விசாரணையை செப்., 26க்கு மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது. ராமஜெயம் மனைவி லதா தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: துறையூர் சீனிவாசன் கொடுத்த நில அபகரிப்பு புகாரில் ராமஜெயத்தை போலீசார் கைது செய்தனர். அவரை பாளைசிறையில் அடைத்துள்ளனர். அவரை திருச்சி சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும், என கோரினார். மனு நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, அருணாஜெகதீசன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் வீர.கதிரவன், ரவி ஆஜராயினர். மனுவை அனுமதிக்க கூடாது என அரசு கூடுதல் வக்கீல் சி.ரமேஷ் ஆட்சேபம் தெரிவித்தார். விசாரணையை செப்., 26க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை