மேலும் செய்திகள்
சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
3 hour(s) ago
வைகுண்டவாசருக்கு சீனுவாச அலங்காரம்
5 hour(s) ago
மஞ்சள் வழித்தடத்தில் விரைவில் 5வது ரயில்
6 hour(s) ago
திருச்சி: நேபாள் விமான விபத்தில் பலியான திருச்சி கட்டுமான சங்க கிளை நிர்வாகிகளின் உடல்கள் நாளை காலை திருச்சி வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் நேபாளில் நடந்த விமான விபத்தில் மவுன்ட் எவரெஸ்ட் பகுதியை சுற்றிப்பார்க்க சிறிய விமானத்தில் சென்ற 19 பேர் பலியாயினர். இதில் திருச்சியைச் சேர்ந்த 8 தமிழர்களும் பலியாயினர். இவர்களின் உடல்கள் நேபாளிலிருந்து விமானம் மூலம் டில்லி கொண்டுவரப்பட்டு பின்னர் டில்லியிலிருந்து இன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னை கொண்டுவரப்பட்டு பின்னர் சாலை வாயிலாக நாளை இரவு அல்லது அதிகாலையில் திருச்சி கொண்டுவரப்படுகிறது. திருச்சியி்ல் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் உறவினர்கள் உடல்களை இறுதிசடங்கி்ற்காக வீட்டிற்கு எடுத்துச்செல்கின்றனர்.
3 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago