உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று முக்கிய அறிவிப்பு முதல்வர் சஸ்பென்ஸ்

இன்று முக்கிய அறிவிப்பு முதல்வர் சஸ்பென்ஸ்

சென்னை : இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், இன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், இந்திய துணை கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும், 'இரும்பின் தொன்மை' என்ற நுாலை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார். அத்துடன், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு, அடிக்கல் நாட்டுகிறார். கீழடி இணையதளத்தை துவக்கி வைக்க உள்ளார். இவ்விபரத்தை, அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவை, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, 'நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள். மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்' என தெரிவித்துள்ளார். முதல்வர் அகழாய்வு தொடர்பாக, ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா அல்லது வேறு துறை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவாரா என, 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.

இன்று அண்ணாமலை அறிவிப்பு

மதுரை மேலுார், வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி பகுதியில், டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன், டில்லி சென்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தார். அதன்பிறகு பேட்டி அளித்த அண்ணாமலை, 'டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் இருந்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்' என்றார்.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், 'இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்' என அறிவித்திருப்பது, தமிழக மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Nathi Magan
ஜன 24, 2025 22:15

முதல்வர் அறிவிப்பு சஸ்பென்ஸ். இன்று டீஸர் . நாளை ட்ரெய்லர். அடுத்து சினிமா. ஆஸ்கார் விருது அறிவிக்க வேண்டியது தான்


திகழ்ஓவியன்
ஜன 23, 2025 11:42

சிரிப்பு தான்


திகழ்ஓவியன்
ஜன 23, 2025 11:35

சிவனே என்று ஆட்டிப்படைப்புது ஆரியம் தாம்


Rajathi Rajan
ஜன 23, 2025 11:19

சிங்க மூதல்வருடன்... தோல்வியை மட்டும் தழுவும் சிறுபிள்ளையின், சின்ன பையனின், போட்டோவை ஏன் போட்டு இருக்கீங்க.......


vivek
ஜன 23, 2025 12:15

ஊளை இடும் சிங்கத்தை இப்போதுதான் பார்கிறேன்


Nathi Magan
ஜன 24, 2025 22:17

சர்க்கஸ் சிங்கம்


Rajarajan
ஜன 23, 2025 11:18

அடுத்த வருடம் தேர்தல். எனவே, எல்லா மகளிருக்கும் உதவித் தொகை. அரசு ஊழியருக்கு, அடுத்த சம்பள கமிஷன் அறிவிப்பு. அதானே. கஜானா முற்றிலும் துடைப்பு.


Azar Mufeen
ஜன 23, 2025 11:13

வேற என்னவா இருக்கும் தி. மு. க, பா ஜ க திருட்டு கூட்டணி பற்றிய அறிவிப்பு தான்


Anantharaman Srinivasan
ஜன 23, 2025 11:06

திமுக அரசின் தீவிர முயற்சியால் டங்ஸ்டன் சுரங்கம் தோண்டுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது தான் அந்த சஸ்பென்ஸ்.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜன 23, 2025 10:57

இன்பநிதி இனிமேல் இளைஞரணி தலைவரா?


திகழ்ஓவியன்
ஜன 23, 2025 11:19

ஆரியக்கூட்டம் பாருங்கள் இன்று இன்பநிதி லெவெலுக்கு இறங்கி விட்டார்கள் எப்படி இருந்த ஆளுமை இப்ப ஒரு சின்ன பயன், ஆனால் இதை எல்லாம் எதிரக்கனும் என்றால் நீங்கள் 117 MLA பெறும்போது யோசிக்கலாம் இப்போ சாரி


Kumar Kumzi
ஜன 23, 2025 12:07

சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறிய ... எப்போதும் திருட்டு திமுகவுக்கு முட்டு குடுப்பான்


திகழ்ஓவியன்
ஜன 23, 2025 12:31

என்ன கொமாரு கனடாவில் சோத்துக்கும் குளுருக்கும் பஞ்சம் இல்லை நேற்று மைனஸ் 40, பாவம் உனக்கு தான் சோத்து பிரச்னை


Nathi Magan
ஜன 24, 2025 22:27

இல்லை. இணை முதல்வர்.


Anand
ஜன 23, 2025 10:32

தினமும் முக்கி முக்கிதான் அறிக்கை வெளியிடுகிறார்...... இன்று மட்டும் ஏன் சஸ்பென்ஸ்?


ديفيد رافائيل
ஜன 23, 2025 10:20

எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை, நீங்க தான் இந்த மாதிரி news போடுறீங்க


SRITHAR MADHAVAN
ஜன 23, 2025 10:44

ராஜராஜ சோழனின் ரத்த உறவினராக கருணாநிதி இருக்கலாம் என அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை