மேலும் செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி : பாரம்பரிய ஓவியர் மனைவிக்கு அரசு வேலை
7 hour(s) ago | 6
வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தில் மின்னல் தாக்கியதில், 25க்கும் மேற்பட்ட 'டிவி', கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. சாத்தூரில் ஒருவர் பலியானார்.கூமாப்பட்டி பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு சூறாவளி காற்றுடன், பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. ராமசாமியாபுரம் மறவர் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள கணேசன், குருவையா உட்பட 25 பேர் வீடுகளில், 'டிவி', கம்ப்யூட்டர், 'பிரிட்ஜ்' கருகி சேதமுற்றன . அப்போது ஏற்பட்ட சத்தத்தால் பலரும் பீதியடைந்து, வீட்டை விட்டு வெளியெறினர்.சாத்தூர்: வெம்பக்கோட்டை கண்டியாபுரம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் அந்தோணி, 25. பெயின்டரான இவர், நேற்று இரவு 7.15 மணிக்கு, மடத்துப்பட்டி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கி இறந்தார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
7 hour(s) ago | 6