உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடுதல் கட்டணம் வசூல்: அரசு பஸ் பயணம் தாமதம்

கூடுதல் கட்டணம் வசூல்: அரசு பஸ் பயணம் தாமதம்

முதுகுளத்தூர்: கோவை-சாயல்குடி பஸ்சில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பயணிகள் டிக்கெட் வாங்காமல் தகராறு செய்தனர். இதனால் பஸ் பயணம் ஒரு மணிநேரம் தாமதமாகி பிற பயணிகள் அவதிப்பட்டனர்.முதுகுளத்தூர்- பரமக்குடி இடையே '1 டூ 3' என்ற பெயரில் இயக்கப்படும் பஸ்களில் கட்டணம் 10 ரூபாய். கோவையிலிருந்து சாயல்குடிக்கு அரசு பஸ் சென்றது. இதில் பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூருக்கு 15 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.கண்டக்டர் தேவராஜன், 'மேலதிகாரிகள் உத்தரவுபடியே கட்டணம் வசூலிக்கிறோம்,' என கூறினார். இருப்பினும் பயணிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், இவர்களுக்கும் கண்டக்டருக்கும் தகராறு ஏற்பட்டது. பஸ் தொடர்ந்து செல்ல சில பயணிகள் தடுக்க முற்பட்டனர். இதையடுத்து பஸ், முதுகுளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது.போலீசார், கோவை போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் பேசினர். 'கட்டணம் மாற்றியமைக்கப்போவதாக' அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பஸ் விடுவிக்கப்பட்டது. இதனால் முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து சாயல்குடிக்கு மதியம் 2 மணிக்கு புறப்பட வேண்டிய பஸ் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால் பிற பயணிகள் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி