உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சங்கரராமன் கொலை வழக்கு :சுந்தரேச அய்யர் ஐகோர்ட்டில் மனு

சங்கரராமன் கொலை வழக்கு :சுந்தரேச அய்யர் ஐகோர்ட்டில் மனு

சென்னை :காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கில், தன்னையும் சேர்த்து விசாரிக்கக் கோரி, ஐகோர்ட்டில் சுந்தரேச அய்யர் மனு தாக்கல் செய்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், காஞ்சி ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் ஜாமினில் உள்ளனர். இவ்வழக்கு, புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.இந்நிலையில், ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தொலைபேசியில் பேசிய பேச்சுக்கள் அடங்கிய 'டேப்' வெளியாகியுள்ளது. சங்கராச்சாரியார், அவரது உதவியாளர், செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, அவரது பிரதிநிதி ஆகியோரின் பேச்சுக்கள், அந்த 'டேப்'பில் உள்ளது என கூறப்படுகிறது. பணம் சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து அந்தப் பேச்சு உள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி சுகுணா, புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார்.இவ்வழக்கில் தனது தரப்பு கருத்தையும் கேட்கக் கோரி, திருமுருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இதற்கு வழக்கறிஞர் சுந்தரராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணிகண்டன் வதன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை 14ம் தேதிக்கு, நீதிபதி சுகுணா தள்ளிவைத்தார்.சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுந்தரேச அய்யரும், ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், 'எனது தரப்பையும் கேட்க வேண்டும். இவ்வழக்கில் நான் குற்றம் சாட்டப்பட்டுள்ளேன். ஆனால், மனுவில் பிரதிவாதிகளாக எங்களை சேர்க்கவில்லை. எங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் இருந்தால், எங்களுக்கு நீதி கிடைக்காது' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ