உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஷ்மீர் வந்த ராகுலுடன் முதல்வர் ஒமர் சந்திப்பு

காஷ்மீர் வந்த ராகுலுடன் முதல்வர் ஒமர் சந்திப்பு

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சியின் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து, காங்கிரஸ் கட்சி பொது செயலர் ராகுலுடன், முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று ஆலோசனை நடத்தினார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு, இரண்டு நாள் பயணமாக ராகுல் நேற்று முன்தினம் வந்தார். லடாக் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கட்சி தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், ராகுல் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அங்கு வந்திருந்த மாணவர்கள், இளைஞர்கள், பஞ்சாயத்து, துணை பஞ்சாயத்து அமைப்பை சேர்ந்தவர்கள், கட்சி தலைவர்களுடன் உரையாடினார். பின்பு, காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.தால் ஏரிக்கரையில் உள்ள ஹஸ்ரத்பால் தர்காவுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு வந்திருந்த உள்ளூர் பிரமுகர்களுடனும், சுற்றுலா பயணிகளுடனும் உரையாடினார்.

இதுகுறித்து கட்சி தலைவர்கள் கூறுகையில், 'இளைஞர்களை அரசியல் இயக்கத்தில் கொண்டு வருவதற்காக, அவர்களை, இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களாக சேர்க்க, ராகுல் காஷ்மீர் வந்துள்ளார்' என்றனர்.இதையடுத்து, முதல்வர் ஒமர் அப்துல்லாவை நேற்று காலை ராகுல் சந்தித்தார். அப்போது, கூட்டணி ஆட்சியின் ஆண்டு விழாவை எப்படி சிறப்பாக நடத்துவது என்பது குறித்தும், மாநிலம் மற்றும் தேசிய அளவில் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காஷ்மீர் பயணம் குறித்து ராகுல் கூறுகையில், 'காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், பஞ்சாயத்து, துணை பஞ்சாயத்து அமைப்பை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடியது மிக இனிமையாக இருந்தது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நான் பெருமையாக கருதுகிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ