மேலும் செய்திகள்
தவெக விருப்ப மனுக்கள் விநியோகம் பிப்.,6 ல் துவக்கம்
8 hour(s) ago
திமுக- காங்., கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது; அண்ணாமலை பேட்டி
12 hour(s) ago | 16
செக்கானூரணி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் மொக்கராஜ்,59. இவரும், இவரது மனைவி கனியம்மாள்,44, மகன் யுவராஜ்,28, ஆகியோரும் நேற்று ஆண்டிபட்டியில் இருந்து மதுரைக்கு பொலீரோ காரில் வந்தனர். அரண்மனைப்புதூரைச் சேர்ந்த தங்கப்பாண்டியன்,64, காரை ஓட்டினார். காலை 11.30 மணியளவில் செல்லம்பட்டி அருகே வந்த போது கார், மதுரையில் இருந்து ஆண்டிபட்டிக்கு சென்ற லாரி மீது மோதியது. இதில் தங்கப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மொக்கராஜ், கனியம்மாள், யுவராஜ் ஆகியோர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு கனியம்மாள் இறந்தார். முதலக்கம்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் பொன்ராம் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
8 hour(s) ago
12 hour(s) ago | 16