மதுரை கோர்ட்டில் பொட்டுசுரேஷ் இன்று ஆஜர்
திருநெல்வேலி: நிலஅபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க நகர செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ், மற்றும் கொடிசந்திரசேகர், கிருஷ்ணபாண்டி ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமர்நாத் என்பவருடைய நிலத்தை அபகரித்த வழக்கு ஒன்றிற்காக பொட்டு சுரேஷ் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.