உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்காதல் தகராறில் உப்பள தொழிலாளி கொலை

கள்ளக்காதல் தகராறில் உப்பள தொழிலாளி கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் தகராறில், உப்பள தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி, பொட்டல்காடை சேர்ந்தவர், கூலித்தொழிலாளி ஈனமுத்து(42), இவரது மனைவி ஜெயலட்சுமி(36). இவர்களுக்கு இரு மகன், நான்கு மகள் உள்ளனர். இந்நிலையில், ஜெயலட்சுமிக்கு இதே ஊர் உப்பள தொழிலாளி இலங்கை ராஜாவுடன்(47), கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருமாதத்திற்கு முன் தனது குடும்பத்தினரை விட்டுப்பிரிந்த ஜெயலட்சுமி, இலங்கை ராஜாவுடன் வசித்துவந்தார். இதனால், ஆத்திரத்தில் இருந்த ஈனமுத்து, நேற்று காலை கோவங்காடு அருகே உப்பளத்தில் வேலை செய்த இலங்கை ராஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக கம்பால் அடித்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த இலங்கை ராஜா பலியானார். ஈனமுத்துவை பிடித்து ஆத்தூர் போலீசார் விசாரித்தனர். மற்றொரு கொலை: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள கல்லத்திக்கிணறு பிரான்சிஸ் மகன் சுந்தர் சிங்(25). இவரை இதே ஊர் குழந்தைசாமி மகன் ஜான்சன்(20), அண்ணன் அசோக்குமார்(22) கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட இந்தமுன்விரோதம் காரணமாக, நேற்று முன்தினம் மாலை ஊரில் வைத்து பைக்கில் வந்த ஜான்சன், அசோக்குமாரை வழிமறித்து சுந்தர்சிங் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்து ஜான்சன் பலியானார். அசோக்குமாருக்கு கையில் படுகாயம் ஏற்பட்டது. சுந்தர் சிங்கை கடம்பூர் போலீசார் கைதுசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை