கல்மாடிக்கு ஐகோர்ட் அனுமதி மறுப்பு
புதுடில்லி: பார்லிமென்ட் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முன்னாள் காமன்வெல்த் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், எம்.பி.,யுமான கல்மாடிக்கு டில்லி ஐகோர்ட் அனுமதி மறுத்துள்ளது. பார்லிமென்ட் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்குமாறு, சுரேஷ் கல்மாடி டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதிகள், இதற்கான அனுமதியை மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.