மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
3 hour(s) ago
திரிசூலம்: போலி விசா மூலம், ஓட்டல் வேலைக்கு ஜெர்மன் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ரவீந்திரன், 26. கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ள இவர், கடந்த சில ஆண்டுகளாக சென்னை, அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக பணியாற்றினர். ஜெர்மனியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.இதையடுத்து, நேற்று காலை, சென்னையில் இருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்றார். அங்கிருந்து பிராங்பர்ட்டிற்கு விமானம் மாறுவதற்கு முன், அவரது ஆவணங்கள் சோதனையிடப்பட்டன.அப்போது, ரவீந்திரன் போலி விசா மூலம் ஜெர்மன் செல்ல முயன்றது தெரிந்தது. துபாய் குடியுரிமை அதிகாரிகள் அவரை மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பினர். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்த ரவீந்திரனை குடியுரிமை அதிகாரிகள், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், ரவீந்திரனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
2 hour(s) ago
3 hour(s) ago