மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
சென்னை: சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு செங்குன்றத்தில் உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் லயோலா கல்லூரி அருகே காரில் வந்து கொண்டிருந்த அவரை வழிமறித்தனர். மேலும் காருக்குள் இருந்த நல்லக்கண்ணுவை வெளியே இழுத்துவிட்டு கார் சாவியை பறித்து சென்றனர்.அப்போது சாலையில் நடந்து சென்ற சிலர் அவரை மீட்டு பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் நல்லக்கண்ணுவின் நண்பர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், வங்கி கடனுக்கான மாதாந்திர பாக்கித்தொகையினை செலுத்த தவறிய காரணத்தால் கார் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை உண்டாக்கியது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago