திருத்தணி அருகே அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
திருவள்ளூர்: திருத்தணி அருகே சரியான நேரத்திற்கு பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டன. திருத்தணி அருகே உள்ளது தாழவேடு கிராமம் .இந்த கிராமத்திற்கு வந்த செல்லும் அரசு பஸ்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படாததை கண்டித்து திருத்தணி -நல்லாட்டூர் சாலையில் தாழவேடு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பஸ்சை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் . இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி தாசில்தார் ஜெயா, மற்றும் போலீஸ் டி.எஸ்.பி., மாணிக்கம், போக்குவரத்து துறை அதிகாரிகள் உட்பட பலர் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர்.