மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 21
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
5 hour(s) ago | 12
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
5 hour(s) ago | 24
திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்ட தி.மு.க.,செயலாளர் கருப்பசாமிபாண்டியன் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மீது அரசியல் ரீதியாக பழிவாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி போலீசை கண்டித்து தி.மு.க.,வினர் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டனர். இதில் மாஜி சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக போஸ்டர் ஒட்டி, தடபுடலாக பந்தலும் போடப்பட்டது. இருப்பினும் உண்ணாவிரதம் திடீரென ரத்தானது. உண்ணாவிரதத்தில் யாராவது தி.மு.க.,வினர் வேண்டுமென்றே அரசாங்கத்தையும் முதல்வரையும் விமர்சித்து பேசி அதனால் மேலும் வழக்குகள் வரலாம் என்பதால் கருப்பசாமிபாண்டியனே அத்தகைய உண்ணாவிரதம் தேவையில்லை என கேட்டுக்கொண்டாராம். இதனால் போராட்டத்தை திடீரென வாபஸ் பெற்றனர்.
3 hour(s) ago | 21
5 hour(s) ago | 12
5 hour(s) ago | 24