திருவெறும்பூரை இணைத்தது செல்லாது: ஐகோர்ட்
சென்னை: திருச்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது செல்லாது என ஐகோர்ட் தீ்ர்ப்பு வழங்கியது. திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது தொடர்பாக பாலசந்தர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மக்கள் கருத்தை கேட்காமல் இணைத்தது தவறு என தீர்ப்பளித்து. மேலும் இணைப்பு குறித்து நாளேடுகளில் விளம்பரம் செய்யப்படவில்லை எனவும், திருவெறும்பூரை இணைப்பை ரத்து செய்வதாகவும் ஐகோர்ட் தீர்ப்பளித்து.