மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago
கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே, கருங்குரங்கு கடித்து குதறியதில் மின்சார வாரிய ஊழியர் காயம் அடைந்தார். லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக இருப்பவர் சித்திரக்குமார்,42. நேற்று காலை குடியிருப்பில் இருந்து மின்நிலையத்திற்கு டூவீலரில் சென்றார். வழியில் இருந்த கருங்குரங்கு ஒன்று, அவரை துரத்திச்சென்று காலில் கடித்து குதறியது. இதில்,காயம் அடைந்தவர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தடுப்பூசி இல்லாததால்,அங்கிருந்து தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கும் தடுப்பூசி இல்லை எனக்கூறியதால், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. லோயர்கேம்ப் மின்வாரிய குடியிருப்பில் இரண்டு கருங்குரங்குகள் சில தினங்களாக அட்டகாசம் செய்து வந்தன. இச்சம்பவத்திற்கு பின், அவற்றை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
10 hour(s) ago | 1
11 hour(s) ago