உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுரங்கப்பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

சுரங்கப்பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

புதுடில்லி: கர்நாடகாவில் இரண்டு எஃகு சுரங்கப்பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது. சுரங்க முறைகேடுகள் தொடர்பான புகார்களையடுத்து, கர்நாடகாவில் சில மாதங்களாக சுரங்க பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரணையில் இருந்தது. இந்நிலையில், பெல்லாரி மாவட்டத்தில் இரண்டு எஃகு சுரங்கங்களை இயக்க மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள கோர்ட், தோண்டி எடுக்கப்படும் எஃகுக்கு இன்றைய மார்கெட் விலையில், 10 சதவீதத்தை கர்நாடக அரசுக்கு ராயல்டியாக வழங்கவேண்டும் என்றும், பெல்லாரி பகுதியில் சுரங்கப்பணிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ