உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை : அமைச்சர்

கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை : அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழவனியப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 31 புதிய கல்லூரிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. இவற்றில் 14 கல்லூரிகளில் விசாரணை முடிவடைந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து இ.கம்யூ., மற்றும் புதிய தமிழகம் கட்சி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசினார் அமைச்சர் பழனியப்பன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை