உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜபாளையத்தில் பஸ்கள் மீது கல்வீச்சு

ராஜபாளையத்தில் பஸ்கள் மீது கல்வீச்சு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அரசியல் கட்சித்தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டதாக கூறி அப்பகுதியில் சிலர் மறியலில் ஈடுபட்டதால் அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் கல்வீச்சில் சேத‌மடைந்தன. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி ரோடு அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது. இங்குள்ள ஒரு அரசியல் கட்சித்தலைவரின் சிலையை சில மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவில் அவமதிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சாலைமறியல் செய்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற டி.எஸ்.பி.கண்ணன், மற்றும் போலீஸ் அதிகாரி நிர்மலா தலைமையிலான போலீசார் சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் மீண்டும் சாலை மறியல் ஏற்பட்டது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் மீது கல்வீச்சில் சேதமடைந்தன. மேலும் பள்ளி வாகனங்கள் மீதும் கல்வீசப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை