உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலப்பிரச்னை: திருச்சியில் ஒருவர் கொலை

நிலப்பிரச்னை: திருச்சியில் ஒருவர் கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் திமுள்ளக்கொடி என்ற பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் என்ற முத்துக்கருப்பன். இவர் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வேன் டிரைவராக உள்ளார். இவர் இரவு 10 மணியளவில் தனது சகோதரர் முருகேசனுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் முத்துக்கருப்பனை வெட்டி கொலை செய்தது. இந்த கொலைக்கு நிலப்பிரச்னை காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்தவர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ