உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகஎஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு

தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகஎஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு

சென்னை:தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக, எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டார்.சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில், நேற்று நடந்தது. அதன்பின், ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.ஏ. சந்திரசேகரன், 324 ஓட்டுக்கள் பெற்று, வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கேயார், 300 ஓட்டுகள் பெற்று, தோல்வியடைந்தார். துணைத் தலைவர்களாக சிவா மற்றும் சத்யஜோதி தியாகராஜனும் தேர்வு செய்யப்பட்டனர்.அதேபோல, செயலர் பதவிக்குப் போட்டியிட்ட முரளிதரன், தேனப்பன் ஆகியோரும், பொருளாளராக கலைப்புலி தாணுவும் வெற்றி பெற்றனர். இதுதவிர, 21 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நள்ளிரவுக்கு மேலும் தொடர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ