மேலும் செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி : பாரம்பரிய ஓவியர் மனைவிக்கு அரசு வேலை
3 hour(s) ago | 5
நடிகை திரிஷா குறித்த பேச்சு: நயினார் நாகேந்திரன் வருத்தம்
8 hour(s) ago | 17
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள வாகன கட்டண வசூல் மையங்களில் (சுங்கச் சாவடி), பணம் செலுத்தி ரசீது பெற நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருப்பதை தவிர்க்க, 'ப்ரீ பெய்டு' கார்டு மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
சுங்கச் சாவடிகளில், கட்சிக் கொடி கட்டி செல்லும் வாகனங்கள், 'டோல்கேட்டில்' பணம் செலுத்தி ரசீது வாங்காமல் செல்ல முயற்சிக்கும் போது, ஊழியர்கள் சில்லரை சரியாக கொடுக்காத போது, பிரச்னை எழுகிறது. இது போன்ற பிரச்சனைகளை கருதி, மாநில போக்குவரத்து திட்டமிடல் பிரிவு, முன்பண கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இத்திட்டம் அமலுக்கு வந்தால், வாகன ஓட்டிகள், 'கிரெடிட்', 'டெபிட் கார்டு' வடிவிலான கட்டண அட்டையை சுங்கச் சாவடியில் உள்ள இயந்திரத்தின் முன் காண்பித்தால் போதும். அட்டையில் உள்ள தொகையில் இருந்து சுங்க இயந்திரம், கட்டணத்தை எடுத்து கொள்ளும். இதன் மூலம், வாகனங்கள் தாமதம் இல்லாமல் சுங்கச் சாவடியை கடக்கலாம்.
திட்டம் குறித்து, மாநில போக்குவரத்து மற்றும் திட்டமிடல் பிரிவு ஐ.ஜி., ராஜேந்திரன், ''அரியானா மாநிலம் கூர்கானில் உள்ள டோல்கேட்டில் வாகன ஓட்டிக்கும், டோல்கேட் மையத்தில் இருந்த ஊழியருக்கும், பணம் கொடுத்து ரசீது வாங்குவதில் தகராறு ஏற்பட்டு, ஊழியர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டார்,'' எனக் கூறினார்.
மேலும், ''சட்டம்-ஒழுங்கு சம்பவங்களை கட்டுப்படுத்தவும், நெரிசலை குறைக்கவும் தான் இத்திட்டம். இது போன்ற சட்டம்-ஒழுங்கு சம்பவங்களை தவிர்க்க வேண்டுமானால், வாகன ஓட்டிகள் விரைவாக டோல்கேட்டை கடந்து செல்லும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.''
''இந்த முன்கட்டண வசதியால், வாகன ஓட்டிகள் டோல்கேட்டில் வாகனத்தை முழுமையாக நிறுத்தாமல், லேசாக உருட்டிக் கொண்டே, அங்கு வைக்கப்பட்டுள்ள மிஷினின் திரையில் அட்டையை காண்பித்து விட்டு, அடுத்த டோல்கேட்டை நோக்கி பயணத்தை துவக்கலாம்,'' என, ராஜேந்திரன் தெரிவித்தார்.
இத்திட்டம் குறித்து, தமிழ்நாடு சாலை மற்றும் திட்டப் பிரிவு மற்றும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு, விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என, அவர் தெரிவித்தார்.
முன்பண கட்டண அட்டைகளை தயாரித்து, விற்பனை செய்வதற்காக, ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., உட்பட, பல்வேறு அலைபேசி சேவை நிறுவனங்கள் அணுகப்பட்டுள்ளன. 'ஈசி கோயிங்' என்ற பெயரில் அட்டைகள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
3 hour(s) ago | 5
8 hour(s) ago | 17