உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநகராட்சி உறுப்பினர் பதவிக்குநேற்று 60 பேர் விருப்ப மனு

மாநகராட்சி உறுப்பினர் பதவிக்குநேற்று 60 பேர் விருப்ப மனு

சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க.,வின் சார்பில் மேயர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்களுக்கு, கடந்த 3ம் தேதி முதல் விருப்ப விண்ணப்பம் வழங்கப்பட்டு வந்தது. தென்சென்னை மாவட்ட தலைமை அலுவலகத்திலிருந்து 1,000 பேர் விண்ணப்பங்கள் வாங்கிச் சென்றனர்.பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை நேற்றிலிருந்து வரும் 12ம் தேதி வரை மாவட்ட தலைமை அலுவலகத்தில் கொடுக்கலாம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை, தி.நகரில் உள்ள தென் சென்னை மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் மாவட்டச் செயலர் அன்பழகனிடம் நேற்று தாக்கல் செய்தனர். நேற்று முதல் நாள் என்பதால், 60 பேர் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ