உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.எல்., கவுன்சிலிங்வரும் 12ம் தேதி துவக்கம்

பி.எல்., கவுன்சிலிங்வரும் 12ம் தேதி துவக்கம்

சென்னை : பி.எல்., பட்டப்படிப்பிற்கு, வரும் 12ம் தேதி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கிறது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேக்தர் சட்ட பல்கலையின் கீழ் இயங்கும் அரசு சட்டக் கல்லூரிகளில், மூன்றாண்டு பி.எல்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது. 12ம் தேதி ஓ.சி., பிரிவினருக்கும், 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை, பி.சி., - எம்.பி.சி., உள்ளிட்ட இதர பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடைபெறுகிறது.பல்கலை வளாகத்தில் நடைபெறும் இக்கவுன்சிலிங்கிற்ககான தரவரிசை பட்டியல், www.tndlu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எடுத்துள்ள, 'கட் - ஆப்' மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதியுடையோர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாதோர், பல்கலை நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு சட்ட பல்கலை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி