உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிருபர் வேலை வாங்கித்தருவதாக30 பெண்களை ஏமாற்றியவர் கைது

நிருபர் வேலை வாங்கித்தருவதாக30 பெண்களை ஏமாற்றியவர் கைது

தேனி:நிருபர் வேலை வாங்கித்தருவதாக கூறி 30 பெண்களை ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.தேனி அருகே கண்டமனூர் அரண்மனைப்புதூர் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன், 40. இவர் மாதாந்திர பத்திரிகை ஒன்றில் நிருபர் வேலை வாங்கித்தருவதாகவும், இதற்கு டெபாசிட் தொகை 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக்கூறி 30 பெண்களிடம் வசூலித்துள்ளார். ஐந்து பேருக்கு அடையாள அட்டை மட்டும் தந்துள்ளார். மற்றவர்களுக்கு அடையாள அட்டை, வேலை இரண்டும் தரவில்லை. தேனி சுப்பன் தெருவை சேர்ந்த சரண்யா, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் மகேந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை