உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறியியல் கவுன்சிலிங்: 8,294 இடங்கள் ஒதுக்கீடு

பொறியியல் கவுன்சிலிங்: 8,294 இடங்கள் ஒதுக்கீடு

சென்னை : கடந்த நான்கு நாட்களில், பொறியியல்பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில் 8,294 இடங்கள்,மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இன்றைய(11ம் தேதி) கவுன்சிலிங்கில், 2,518 பேருக்கு,சேர்க்கை உத்தரவுகள் வழங்கப்பட்டன.கடந்த 8õம் தேதி முதல், பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடந்து வருகிறது. இன்றுடன் முடிவடைந்தநான்கு நாட்களில், 8,294 இடங்கள், மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.அண்ணா பல்கலையில் 1,838 இடங்கள், அரசுமற்றும் நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 2,722இடங்கள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில்3,734 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இன்று 3,066 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.ஆனால், 2,518 மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். 536 பேர் வரவில்லை.கவுன்சிலிங்கிற்கு வந்த மாணவர்களில் 12 பேர்,பாடப்பிரிவு எதையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர்.மொத்த கவுன்சிலிங் இடங்களில், ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடங்கள் போக, இன்னும் ஒருலட்சத்து 32 ஆயிரத்து 66 இடங்கள் காலியாகஇருப்பதாக, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ