உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி அடுக்குமாடி வீடுகளில் கட்டாயம்: மாசு வாரியத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவு

கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி அடுக்குமாடி வீடுகளில் கட்டாயம்: மாசு வாரியத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: 'அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் இருப்பதை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், செங்குன்றம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. இதனால், நிலத்தடி நீர் மாசடைகிறது. காப்புக்காட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, செங்குன்றத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட வேண்டும்' என, சுந்தரமூர்த்தி, சரஸ்வதி கோபாலன், பிரியா கோபாலன் ஆகியோர், 2022ல் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.அதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:மனுதாரர்கள் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், செங்குன்றம் காப்புக்காட்டிற்கு செல்வதை நிரந்தரமாக தடுக்க வேண்டும்.சீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.வடிகால் வசதி இருப்பதை, நீர்வளத்துறை உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அடுக்குமாடி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் இருப்பதை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.1பொது கட்டட விதிகளின் அடிப்படையில், 50 வீடுகளுக்கு மேல் வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். இதில், 2.15 லட்சம் சதுர அடி வரையிலான கட்டட பரப்பளவுள்ள குடியிருப்புகளில், நாளொன்றுக்கு, ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் உடைய நிலையங்கள் அமைக்க வேண்டும்2கட்டுமான திட்ட அனுமதி பெறும் நிலையில், இதற்கான வடிவமைப்பு விபரங்களை தெரிவித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் பெற வேண்டும்3தற்போதைய நிலவரப்படி, நாளொன்றுக்கு, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 30 முதல், 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்4அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டுமான நிறுவனங்கள், இதற்கான வசதியை ஏற்படுத்தினாலும், வீடு ஒப்படைப்புக்குப்பின் இதைத்தொடர்ந்து பராமரிப்பது. வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாகிறது. இந்த பொறுப்பை, சங்க நிர்வாகங்கள் சரியாக செய்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்களின் பணி5இதற்கான தொடர் பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவது போன்றவற்றில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

விதிமுறைகள் என்ன?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
பிப் 15, 2025 13:10

குடிநீர் சப்ளை ஒழுங்கா இருக்குதா?


Varadarajan Nagarajan
பிப் 15, 2025 11:59

செய்தியின் தலைப்பு "மாசு வாரியம்" என நக்கலாக மிகச்சரியாக உள்ளது. அவர்கள் அதை கட்டுப்படுத்தவில்லை என அருமையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மின்சாரம், சாலைகல், குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவை அதிக முதலீடு மற்றும் இடவசதி தேவை. இவற்றை தனிநபர்களோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பிலோ கட்டமைத்து செயல்படுத்துவது சிரமம். எனவேதான் இவைகளை பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் கட்டமைத்து செயல்படுத்தப்படுகிறது. இவைகளுக்காக தேவையான நிதியை வரிவசூல் மூலமும் உபயோகிப்பாளர்களிடமிருந்து காலாண்டு கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இவற்றை முறையாக செய்யாமல் குடியிருப்பாளர்களை கட்டாயப்படுத்துவது முறையல்ல. அதோடு இதுபோன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள குடியிருப்புகளுக்கு எந்தவித வித்தியாசமும் இல்லாமல் சொத்துவரி வசூல் செய்யப்படுகின்றது. அதைவிட கொடுமை என்னவென்றால் கழிவுநீரை முறையாக சேகரித்து சுத்திகரிக்கும் நீர்நிலைகளில் கலக்கவிடுவது அதிகமாக உள்ளாட்சி அமைப்புகள்தான். சிங்கார சென்னையின் கூவம் மற்றும் அடையாறு, மதுரையின் வைகை நதி, அமராவதி ஆறு போன்ற ஆறுகளின் இன்றைய நிலை இதற்க்கு சான்று.


Sampath Kumar
பிப் 15, 2025 10:54

முன் கூட்டியே சேய்து இருக்கனும் பறவை இல்லை இப்போவது சேய்த்தார்களே நன்று


V RAMASWAMY
பிப் 15, 2025 10:19

கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிக்கு இடமும் அதற்கான வசதியும் தேவை. பல கட்டிடங்கள் எப்பொழுதோ பின்னொரு நாளில் இம்மாதிரி கட்டாயம் வருமென்று தெரியாமலிருக்கும்பொழுது கட்டப்பட்டவை, அவற்றில் இந்த வசதிக்கு இடமில்லையென்றால் எப்படி கட்டாயப்படுத்த முடியும்? மேலும் இந்த வசதியினால் கெட்ட வாடை வந்து அங்கு வசிப்பவர்களுக்கு சுகாதாரக் கேடு வரக்கூடும். இவற்றையெல்லாம் ஆராயாமல் சட்டம் போடலாமா?


Bhaskaran
பிப் 15, 2025 09:14

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்கள் காட்டில் கோடைமழை


Ramona
பிப் 15, 2025 07:19

என்ன உத்தரவு போட்டாலும், யாரும் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை, கழிவு நீர் நேர கூவத்தில் கலக்கிறத எந்த வாரியமும் கண்டிப்பாக தடுக்க முடியாத நிலை இன்றைய நிலை.


Kasimani Baskaran
பிப் 15, 2025 07:16

இதற்க்கெல்லாம் வேகமாக தீர்ப்பு சொல்பவர்கள் கூவத்துக்கு ஒரு வழிசெய்ய வேண்டாமா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை