அறிவியல் ஆயிரம்
எலும்புக்குள் பிளாஸ்டிக்
நிலம், நீர், காற்று என அனைத்திலும் பிளாஸ்டிக் கலந்து விட்டது. இதனால் பூமியின் சுற்றுச்சூழல் கேள்விக்குறியாகி உள்ளது. அதே போல மனித உடலுக்குள்ளும் பிளாஸ்டிக் நுண் துகள் கலந்திருப்பதை ஏற்கனவே பல ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது மனித எலும்பு திசுக்களுக்கு உள்ளேயும் பிளாஸ்டிக் நுண் துகள் நுழைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் பிளாஸ்டிக் துகள் - எலும்பு நோய்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.