உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!

36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி சேர்ந்த மூன்று வயது சிறுவன் 36 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளான்.கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த முன்னாள் அரிமா சங்க தலைவர் சண்முக சுந்தரம், ராஜேஸ்வரியின் பேரனும், அரவிந்த், ராஷ்மிகா தம்பதியின் 3 வயது 3 மாதம் நிறைந்த மகன் யாத்விக் 100 மீட்டர் தூரத்தை 36 வினாடிகளில் கடந்து இந்தியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். இதனால் 3 வயது சிறுவனை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yaaihf7d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சிறுவனின் பெற்றோர் கூறியதாவது: சிறுவனின் தந்தை சிறு வயது முதல் ஓட்டப்பந்தத்தில் ஆர்வம் கொண்டவர். பணிச்சுமை காரணமாக அந்த பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் போகி உள்ளது. உசேன் போல்ட் வீடியோ பார்த்து தான் ஓட்டப்பந்தின் மீது ஆர்வம் வந்தது. அந்த ஆர்வத்தை நாங்கள் உரிய முறையில் பயிற்சி அளித்து, இந்த சாதனையை புரிய வைத்துள்ளோம் என தெரிவித்தனர்.'எனது மகன் யாத்விக் போன்று ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பயிற்சி கொடுத்து சாதனை புரிய வைக்க வேண்டும்' என சிறுவனின் தாயார் வேண்டுகோள் விடுத்தார். மழலையின் மலைக்க வைக்கும் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Saai Sundharamurthy AVK
மார் 06, 2025 16:59

குழந்தை யாத்விக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !!!!


PR Makudeswaran
மார் 06, 2025 14:33

வாழ்த்துக்கள்


Subramanian
மார் 06, 2025 14:28

வாழ்த்துகள், பாராட்டுகள்


Petchi Muthu
மார் 06, 2025 14:22

வாழ்த்துகள் தம்பி


சமீபத்திய செய்தி