உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.11.41 கோடி பறிமுதல்

ரூ.11.41 கோடி பறிமுதல்

சென்னை:தமிழகத்தில், 11.41 கோடி ரூபாய் ரொக்கம் உட்பட, 13.22 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.நேற்று வரை, 11.41 கோடி ரூபாய் ரொக்கம்; 76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள்; 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, போதைப் பொருட்கள்; 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள்; 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இலவசப் பொருட்கள் என, மொத்தம், 13.22 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை