உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ்சில் பயணம் பரிசு திட்டத்தில் 13 பேர் தேர்வு

அரசு பஸ்சில் பயணம் பரிசு திட்டத்தில் 13 பேர் தேர்வு

சென்னை : தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் தொலைதுார பஸ்களில் பயணிக்க, www.tnstc.inஎன்ற இணையதளம் மற்றும் செயலியில், டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களை தவிர்த்து, இதர நாட்களில் முன்பதிவு செய்து, எளிதாக பயணம் செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும், கணினி குலுக்கல் முறையில் மூன்று பயணியருக்கு தலா, 10,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கும் திட்டம், இந்தாண்டு ஜனவரி முதல் அமலில் உள்ளது.இந்த திட்டத்தின் வாயிலாக, அதிகம் பேர் பயனடையும் வகையில், கணினி வாயிலாக குலுக்கல் நடத்தி, 13 பேரை தேர்வு செய்து, முதல் மூவருக்கு தலா 10,000 ரூபாய்; இதர 10 பேருக்கு தலா 2,000 ரூபாய் பரிசு வழங்க முடிவானது.இதன்படி, ஜூன் மாதத்திற்கான 13 பேரை, கணினி குலுக்கல் முறையில், சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று தேர்வு செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு ரொக்கப் பரிசு விரைவில் வழங்கப்படும் என, அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி