உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்த மாதம் 2 லட்சம் புது ரேஷன் கார்டுகள்

அடுத்த மாதம் 2 லட்சம் புது ரேஷன் கார்டுகள்

சென்னை:தமிழக அரசு, ரேஷன் கார்டு அடிப்படையில் மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்கிறது. இதனால், பலரும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். எனவே, 2023 ஜூலை முதல் புதிய கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது. அதற்கு முன் விண்ணப்பித்த, 2 லட்சம் பேருக்கு இன்னும் கார்டு வழங்கப்படவில்லை. குறிப்பாக, ஒப்புதல் அளித்து மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய, 80,000 பேருக்கும் கார்டு வழங்கப்படவில்லை. அவர்களில் பலர், உணவு வழங்கல் துறையின் மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு சென்று, கார்டு கேட்கின்றனர். பலர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து, சண்டையும் போடுகின்றனர். இந்த தகவலை அதிகாரிகள், உணவு துறை உயரதிகாரிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான, 2 லட்சம் பேருக்கு தேர்தல் நடத்தை விதி விலக்கி கொள்ளப்பட்டதும், புதிய கார்டு வழங்கப்படும். ஜூன் இரண்டாவது வாரத்தில் இருந்து கார்டு வினியோகம் துவங்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை