| ADDED : மே 10, 2024 11:57 PM
சென்னையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கக் கூடிய வகையில், குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு செப்., 23ம் தேதி, 'உடல் உறுப்பு தானம் செய்பவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும்' என, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதேபோன்ற அறிவிப்பை, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெளியிட்டு செயல்படுத்தத் துவங்கிஉள்ளனர். தமிழகத்தில் அரசு மரியாதை அறிவிப்புக்குப் பின், இதுவரை, 159 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.கடந்த 2023ல், 178 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பெற்ற உறுப்புகள் வாயிலாக, 1,000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இந்தாண்டு, 130 நாட்களில், 102 மூளைச்சாவு அடைந்தவர்களிட மிருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. அதன்படி, 2023 முதல் இதுவரை, 280 பேரிடமிருந்து உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, 1,595 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இதனால், இந்தியளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல்இடத்தில் உள்ளது.- மா.சுப்பிரமணியன்மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்