உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு

40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு

சென்னை: 'வரும் நிதி ஆண்டில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்' என பட்ஜெட்டில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

பட்ஜெட்டின் முக்கி அம்சங்கள் பின்வருமாறு:

* முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் துணையோடு காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை விரிவான ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2c3sukvl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ., நீளத்திற்கு ரூ.310 கோடி ரூபாயில் பாலம் அமைக்கப்படும்.* வரும் நிதி ஆண்டில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.* கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து மருத்துவப் பரிசோதனை அட்டை வழங்கப்படும்.* 700 டீசல் பஸ்களை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பஸ்களாக மறுசீரமைப்பு செய்யப்படும். இதற்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு.* சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், தமிழக சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டம் கொண்டு வரப்படும்.* கால்நடை வளத்தை அதிகரித்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை இனப்பெருக்க கொள்கை உருவாக்கப்படும்.* விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ramesh Sargam
மார் 14, 2025 20:16

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எல்லாமே பொய் அறிவிப்புக்கள்தான். ஒன்றும் நிறைவேறப்போவதில்லை. போய், பேசாம உங்க வேலையை கவனியுங்கள் மக்களே. உங்களின் ஒவ்வொருவர் தலைமீதும் எவ்வளவு கடன் இந்த திருட்டு திமுக வாங்கி இருக்கிறது தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க...


தத்வமசி
மார் 14, 2025 19:50

அடுத்த தேர்தலை நோக்கி போடப்பட்ட பட்ஜெட்


Uuu
மார் 14, 2025 18:53

சிரிப்பு சிரிப்பா வருது


Nandakumar Naidu.
மார் 14, 2025 18:35

எப்போது? 2027 லா? இது தேர்தலுக்காக சுட்ட வடை.


kumarkv
மார் 14, 2025 17:57

போன எலக்க்ஷ்ன்ல அதைதான் சொன்னாங்க.


saravan
மார் 14, 2025 17:43

அரசு ஊஊழியர்களுக்கு சரண்டர் விடுப்பு உண்டாம்...ஆனால் 01.04.2026 முதலாம்...அப்படியே பழைய பென்ஷனும் உண்டு...ஆனால் 01.04.2126 என அறிவித்திருக்கலாம்...இதுதாண்டா திராவிட மாடல்... இதுதாண்டா திராவிட மாடல்...


vivek
மார் 14, 2025 17:26

40 ஆயிரம் காலி பீர் பாட்டில் கள் நிரப்பப்படும்....


mindum vasantham
மார் 14, 2025 17:06

தமிழக கடன் பத்து லக்ஷம் கோடியை தாண்டி விட்டது


Kumar Kumzi
மார் 14, 2025 16:35

அட அண்டப்புளுகு திருட்டு திராவிஷ கொத்தடிமைங்களா இத தானேடா போன சட்டசபை தேர்தல் வாக்குறுதிலையும் சொன்னிங்க


vijai hindu
மார் 14, 2025 16:31

வாயில வட சுடு


முக்கிய வீடியோ