உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில நெடுஞ்சாலை துறையை மறுசீரமைக்க 5 பேர் குழு

மாநில நெடுஞ்சாலை துறையை மறுசீரமைக்க 5 பேர் குழு

சென்னை: மாநில நெடுஞ்சாலை துறையை மறுசீரமைப்பு செய்வதற்கு, ஐந்து பேர் அடங்கிய குழுவை, தமிழக அரசு நியமித்துள்ளது.பொதுப்பணித்துறையில் இருந்து, 1996ம் ஆண்டு, நெடுஞ்சாலைத்துறை தனியாக பிரிக்கப்பட்டு, அரசு செயலர் பதவியுடன் செயல்பட துவங்கியது. இதனுடன், சிறு துறைமுகங்கள் இணைக்கப்பட்டு, 2008ல், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை என, பெயர் மாற்றப்பட்டது. இதில், பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவற்றின் வழியாக, 67,216 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. இத்துறையை மேம்படுத்தவும், பிரிவுகளை மாற்றி, துறையை மறு சீரமைக்கவும், அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, நெடுஞ்சாலை துறையில் உள்ள பாலங்களை ஆய்வு செய்து, அதன் உறுதித்தன்மையை கண்டறிந்து, பழுதுகள் இருந்தால் உடனடியாக சீரமைக்க, நிபுணத்துவம் வாய்ந்த பொறியாளர்களை கொண்ட, 'பாலங்கள் சிறப்பு ஆய்வு பிரிவு' உருவாக்கப்பட உள்ளது. நெடுஞ்சாலைத் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புதல்; ஐந்து ஆண்டு களுக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்கள் தேவையா என ஆய்வு செய்தல்; துறை மறுசீரமைப்பு ஆகியவை குறித்து, விரிவாக ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க, 5 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் செல்வதுரை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், தமிழக சாலை மேம்பாட்டு நிறுவன தலைமை பொது மேலாளர் பழனிவேல், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, தேசிய நெடுஞ்சாலை பிரிவு துணை தலைமை பொறியாளர் சிவகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இதற்கான உத்தரவை, நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
செப் 01, 2024 08:04

தேசிய நெடுஞ்சாலை வந்த பின் அரசியல் போட்டி மாநில நெடுஞ்சாலை துறை முன்பு போல் பொதுப்பணி துறையுடன் இணைக்க வேண்டும். நிர்வாக செலவுகள், நிதி ஒதுக்கீடு குறைக்க வேண்டும். மத்திய அரசுடன் இணக்கம் இல்லாத மாநிலங்கள் போட்டி அரசு நடத்தி வருகின்றனர். மத்திய அரசு முறைப்படுத்துவது இல்லை. உச்ச நீதிமன்றம் அரசியல் பார்வை செலுத்தினால், நிதி விரயம். பிரிவினை வளரும். அதிகார போட்டி நோய் முற்றும் மாநிலங்களில் அறுவை சிகிச்சை அவசியம். ஒரு நாள் உச்ச நீதிமன்றத்தை எதிர்க்க மாநில உயர் நீதிமன்றம் துணியும்?


Kasimani Baskaran
செப் 01, 2024 06:17

என்னதான் அமைத்தாலும் நிதி வேண்டும். அதை நேர்மையாக செலவு செய்து மதிப்பீட்டுக்கு உட்பட்டு சாலைகளை அமைக்க அமைச்சகம் வேண்டும். அது எங்கு தமிழ் நாட்டில் இருக்கிறது என்று கேள்வி கேட்டால் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை