உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொபைல் செயலி உதவியால் ரவுடிகள் 550 பேர் சிக்கினர்

மொபைல் செயலி உதவியால் ரவுடிகள் 550 பேர் சிக்கினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எப்.ஆர்.எஸ்., எனப்படும், மொபைல் செயலியின் உதவியுடன், கடந்த ஆறு மாதங்களில், 550 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழக காவல் துறையில், முக அடையாளத்தை வைத்து, குற்றம் செய்த நபர்களை கண்டறிய, எப்.ஆர்.எஸ்., எனப்படும், மொபைல் செயலி பயன்படுத்தப்படுகிறது. இதில், மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் நிலையங்கள் வாரியாக பதிவான வழக்குகள், அவற்றில் சிக்கிய நபர்கள் குறித்த விபரங்கள், பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. ரவுடிகள், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் குறித்த தரவுகளும் இடம் பெற்றுள்ளன.அதேபோல, 'ஸ்மார்ட் காவலர்' என்ற மொபைல் செயலியிலும், ரவுடிகள் உள்ளிட்ட தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் வாயிலாக, போலீசார் வாகன சோதனையில், சந்தேக நபர்களை படம் பிடிக்கும் போது, அவர் குற்ற வழக்கில் சிக்கியவராக இருந்தால், அவர் யார்? எந்த ஊர். எந்த மாதிரியான குற்றத்தில் ஈடுபட்டவர், அவர் மீது நிலுவையில் உள்ள வழக்கு என்ன என்பது உட்பட, அனைத்து விபரங்களும் தெரிந்து விடும். அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களில், மொபைல் செயலி உதவியுடன், 550 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'மொபைல் செயலிகளில், ரவுடிகள், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் என, 30,௦௦௦ பேரின் தரவுகள், பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இந்த விபரம், தலைமறைவாக உள்ள ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்ய உதவியாக உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kanns
மார் 12, 2025 19:13

Gravest Misuses of PeopleGrantedPowers Against Suoreme People. ABOLISH ALL BiasedCOURTS& Police SUPERIORS. ATLEAST 50%CASES are FALSE & COOKEDUP incl Evidences/Witnesses etc by Vested-Biased-Selfish-CONSPIRING CASE/NEWS/ VOTE/ POWER HUNGRY& PowerMISUSING CRIMINAL GANGS incl False Complainants Proof: SelfDeclared SAINTS When Entire Society Criminalised NEVER Booked-FIRd Defamed Arrested Prosecuted Convicted ln Same Trials. HOWEVER, GENUINECASES Must be Investigated-Tried UNBIASEDLY& Fast for PUNISHING REAL ACCUSED Not Scapegoats& FALSECOMPLAINANTS& POWERMISUSERS in Same Trials SACK& PUNISH 95%JUDGES NOT PUNISHING SO


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 12, 2025 08:36

அப்போ கிம்ச்சை மன்னரின் இரும்புக்கரங்களால் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லீங்களா ??


Padmasridharan
மார் 12, 2025 05:24

திருவான்மியூர் கடற்கரையில் வரும் காவல்துறையினர் வேண்டுமென்றே கண்டவர்களை எல்லாம் புகைப்படம் எடுக்கின்றனர். எடுத்துவிட்டு "உன்னை மூன்று முறை எடுத்துவிட்டேன் அதனால் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துவிடுவேன் என்று பயமுறுத்திகிறார்கள். அசிங்கமாக பேசி, அடித்து பணமும் புடுங்கிகிறார்கள்.


Dharmavaan
மார் 12, 2025 07:26

அவனும் ரவுடிகளே போலீசாக இருக்க லாயக்கற்றவன்


முக்கிய வீடியோ